ஓ நெஞ்சே நீ மகிழ்ந்து களிகூர்நிதிடு
o nenjae nee magizhndhu kaligoornidhidu
ஓ நெஞ்சே, நீ மகிழ்ந்து களிகூர்நிதிடு (2) உன் சிருஷ்டிகர் உன்னை போலவே சிருஷ்டியாகிறார் இம்மானுவேல் உன்னோடென்றும் இருக்க வருகிறார் (2)
விண்னை விட்டு மண்ணில் வந்த தேவனின் மைந்தனே கந்தையிலும் நிந்தையிலும் தவழ்ந்ததேன் ? தந்தையின் சித்தத்தினை சிந்தையில் கொண்டு உம் மந்தையில் என்னையும் இணைக்கவே பாவம் சாபம் நீக்கியே பரலோகம் போல் மண்னை மாற்றவே தேகம் வாடத் தொழுவினைத் தழுவினீர் இயேசுவே
நித்தியத்தின் வழியினை சத்திய தேவனே நிச்சையித்து தந்த அன்பின் நாளிதுவே உம்முடைய சாயலினில் என்னையும் மாற்றவே என்னுடையை ரூபம் கொண்ட நாளிதுவே பூமியே புதிதானதே பூவைப்போல் இயேசு மலர்ந்ததால் அன்பின் தென்றலும் வீசுதே ஆண்டவர் மண்ணில் தவழ்ந்ததால்