நுகங்களை முறிக்கும்
nugangalai murikkum
நுகங்களை முறிக்கும் ஆவியானவரே - எந்தன் கட்டுகள் அறுத்து காயங்கள் ஆற்றி என் தாகம் தீர்த்திடுமே -2
1. எத்தனையோ முறை தவறினபோதும் அன்பின் பார்வையால் திருத்தினீரே - 2 அத்தனை முறையும் என் கரம் பிடித்து - 2 தெளிவான பாதையில் நடத்தினீரே - 2
2. எத்தனையோ சொந்தம் நான் தேடி அலைந்தேன் எல்லாம் சோகமாய் மாறினதே - 2 என் நுகம் யாவும் முறித்திட வாரும் - 2 மகிமையின் சாயலை அடைந்திடவே - 2