நொந்து சோர்ந்து இளைத்துப் போனாயா
nondhu sorndhu ilaithup ponaayaa
1. நொந்து சோர்ந்து இளைத்துப் போனாயா? யேசுவிடம் சொல் யேசுவிடம் சொல் செல்வம் நீங்க சங்கடமானாயா? யேசுவிடம் மட்டும் சொல்.
யேசுவிடம் சொல் யேசுவிடம் சொல் யேசுவே ஆப்த நண்பர் யேசு போன்ற சகோதரர் இல்லை யேசுவிடம் மட்டும் சொல்.
2. கவலையால் கண்ணீர் சிந்துராயா? யேசுவிடம் சொல் யேசுவிடம் சொல் ரகசியப் பாவமுண்டானாலும் யேசுவிடம் மட்டும் சொல்.
3. சூழும் துன்பம் பயப்படுத்தினால் யேசுவிடம் சொல் யேசுவிடம் சொல் நாளை என்ன வருமென பயந்தால் யேசுவிடம் மட்டும் சொல்.
4. சாவு எண்ணம் சங்கடம் உண்டாக்கில் யேசுவிடம் சொல் யேசுவிடம் சொல் ரண்டாம் வருகை திடுக்கிடச் செய்தால் யேசுவிடம் மட்டும் சொல்.