நித்ய ஜீவன் எனக்குண்டு நியாயத்தீர்ப்பின்
nithya jeevan enakkundu niyaayatheerppin
1. நித்ய ஜீவன் எனக்குண்டு நியாயத்தீர்ப்பின் நாளிலே என் பயம் எல்லாம் நீங்கிற்று விஸ்வாசித்த போதே.
துன்பம் சகிப்போம் இன்னும் கொஞ்சம் காலந்தான் (2) துன்பம் சகிப்போம் ராஜ்யம் சேர்வோம் சீக்கிரத்தில்.
2. உலகம் என்னைப் பகைத்தால் பயமின்றி போர் செய்வேன் சோதனை எல்லாம் வெல்லுவேன் யேசுவின் வல்லமையால்.
3. துன்பம் துக்கம் மிகுந்தாலும் அவரை விட்டு நீங்கேன் என் மீட்பரை நான் சந்திக்க ஆயத்தமாயிருப்பேன்.
4. நீ உன் பாவத்தை உணர்ந்து பரனண்டை ஓடி வா அவர் பாவம் போக்குவார் பரிசுத்தமாக்குவார்.