நித்தியமாம் சிநேகத்தின் ஆழமும்
nithiyamaam sinegathin aazhamum
1. நித்தியமாம் சிநேகத்தின் ஆழமும் உயரமும் நீளமும் வீதியும் ஆராய்ந்திட, சிநேகிதரில் நின்றென்னைப் பிரித்தீரோ, இயேசுவே உம்மோடு கூடவே வாசம் நான் செய்யவே?
2. வானாதி வானங்களும் அடங்கவே முடியாத தேவாதி தேவன் நேச புத்திரன், தூதுவர் தகுதிகளையும், தூயவர் மகிமையையும், தூதரவே விட்டிறங்காக் மண்ணில் வந்தாரே?
3. கர்த்தாதி கர்த்தாவே, ராஜாதி ராஜா வும், இகலோக ராஜ்யங்கள் தேடிடாமல், கல்வாரிக் குருசினில் பாவிகளைத் தேடியே நித்தியமாம் யாகம் இரத்தமும் விட்டாரோ?
4. உலகில் ஏன் சொந்தமா பிரியமான பல உண்டு. இன்பம் சிநேகிதர் சிநேகமுமுண்டு; ஆனால் கல்வாரி சிநேகம் அதன் முன்பிலே மறைந்து போன், இவை யாவும், பனியையும் போல
5. சிநேகிதர் அகல்வார், சோதரர் சேருவார். மாதா பிதா க்களும் மறைந்து போவார்: மரணத்தின் காரிருள் பள்ளம் இப்பாதையில் பிரியாதென் கூடவே வருகின்றார் இயேசுவே
6. பிரியாத நேசரே தீராத நேசமே! நீரே என் நித்தியமாய் சுதந்தரமே இப்பூவில் மட்டும், நித்திய நித்தியம் யுகங்களாய், என் ஆத்ம நேசரோடே வாழுவேன் நித்தியமாய்