நித்திய ஸ்துதிக்குரிய
nithiya sthudhikkuriya
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கு பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம் - 3
ஆலய பேழைதனில் அன்போடு காத்திருக்கும் ஆண்டவா நன்றி சொல்லி ஆராதனை செய்கிறோம்
அப்பத்தின் தோற்றத்திலே அன்பென்ற அற்புதமே பொற்பாதம் வீழ்ந்திடுவோர் அற்ப மனிதரெல்லாம்
தன்னையே எங்களுக்காய் தந்த நற்கருணை நாதா உன்னன்பில் என்றென்றுமே சாட்சிகளாய் வாழுவோம் என்றென்றுமே வாழுவோம்