நித்திய காலமாய்
nithiya kaalamaay
நித்திய காலமாய் இன்ப இயேசுவே இணையில்லா கீதங்களாலே அன்பால் என் ஜீவியத்திலும் தந்த நன்மைகளெல்லாம் எண்ணியே துதியே சாற்றுவேன்
1. நானிலந்தனிலே நாடியென்னில் நான் மதி போல நாட்டிய தயவு நாவினால் கூறவும் நாட்களும் இல்லையே நாதனே நாட்கவி பாடுவேன் - நித்
2. வாரிதி போன்ற சோதனைகள் காரிருள் சூழ்ந்திடும் வேளை பாரினில் நித்தமும் கண்கள் என் மீதிலே பரிவுடனே வைத்தே நடத்தினீர் - நித்
3. மகிமையின் மகுடமாய் மகிதலத்தில் ஓர் திரு மனையாய் மகிழ்ந்து ஆவியில் மாற நின் சாயலாய் மகிபனே அருள் நல்குமே - நித்
4. முன்னானவையே நாடி நான் பின்னானவையே மறந்தும் இகத்தில் தொடர் வாஞ்சையாய் உம் நிறைவதனை போராடுவேன் அதை அடையவே - நித்
5. முடிவில்லா உம் ஆண்டுகள் போல் அடியாரில் நின் சிந்தையும் நிலையை நின் மனம் போலவே மாற்றி எப்பாதையும் சீயோனாய் விளங்கச் செய்யுமே - நித்