நிறைவாழ்வை நோக்கி திருப்பயணம்
niraivaazhvai nokki thiruppayanam
நிறைவாழ்வை நோக்கி திருப்பயணம் பாருலகில் செல்லுவோம் - அருள் வாழ்வு தரும் வார்த்தைகளால் நன்மைகளை நாம் செய்வோம் ( 2 ) செல்வோம் விரைந்து செல்வோம் நிறைவாழ்வை நோக்கியே செல்வோம் செய்வோம் விரைந்து செய்வோம் இனி புதியதோர் உலகினை செய்வோம்
சுமை சுமக்கும் தோள்களுக்கு வலிமையினை ஊட்டுவோம் சுகம் மறந்த மாந்தருக்கு வளமையினைக் காட்டுவோம் ( 2 ) இரு கரங்கள் விரித்திங்கு வாடுவோரைத் தேற்றுவோம் - 2 இறையரசின் கனவுகளை நாடுதோறும் சாற்றுவோம்
2 . பரிவிரக்கம் சாந்தம் அன்பு பொறுமை கொள்ளுவோம் மகிழ்ச்சியிலும் அமைதியாக அடக்கமுடன் வாழுவோம் ( 2 ) விசுவாசம் நன்னயமும் கேடயமாய்த் தாங்கியே - 2 புதுஇனமாய் புதுயுகமாய் வாழ்வு நோக்கி செல்லுவோம