நிறைவான பிரசன்னமும்
niraivaana pirasannamum
நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா
நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே
இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்
குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்
காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்