நினையாத நாழிகையில்
ninaiyaadha naazhigaiyil
நினையாத நாழிகையில் வருவேன் என்றீரே நினைத்துப் பார்க்கிறேன் நெஞ்சமெல்லாம் மகிழுதே -2
அந்த நாள் சமீபமே அதிவிரைவாய் நெருங்கிடுதே -2 அல்லேலுயா பாடி நான் அகமகிழ்வேன் -2
1. பார்ப்பேன் என் இயேசுவை பரிசுத்தவான்களோடு பரவசம் கொள்ளுவேன் பாடி நான் ஆனந்திப்பேன்-2
அல்லேலுயா கூட்டமே ஆர்ப்பரிப்போம் எந்நாளுமே -2 ஆனந்தம் ஆனந்தமே - என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே
2. பொற்த்தள வீதியில் உலாவிடுவேன் -நான் பொற்பரன் இயேசுவை பணிந்திடுவேன் -2 ஆபிரகாமை பார்த்திடுவேன் தாவீதை கண்டிடுவேன் -2
ஜீவக்கனி ருசித்திடுவேன் - அல்லேலுயா ஜீவக்கனி ருசித்திடுவேன் - நினையாத
3. நித்திய நித்திய காலமாக நான் வாழ்ந்திடுவேன் அங்கு வாழ்ந்திடுவேன் -2 இந்த விசுவாசமே நாள்தோறும் பெறுகிடுதே-2
பரிசுத்தம் காத்திடுவேன் - என்றேன்றும பரிசுத்தம் காத்திடுவேன் - நினையாத