நினைத்திடுவாய் உந்தன் சிருஷ்டிகரை
ninaithiduvaay undhan sirushtigarai
நினைத்திடுவாய் உந்தன் சிருஷ்டிகரை வாலிப நாட்களில் நினைத்திடுவாய் - 2 தீங்கு நாட்கள் வருவதற்கு முன் னும் ஆவி தன் தேவனிடம் செல்லுமுன்னமும் தீயவர் கையில் சிக்கிடாமலே ஆவலாய் அவரை நினைத்திடுவாய்
1. சூரிய, சந்திர, நட்சத்திரங்களும் சூனியம் போகுமுன்னரே விண்ணொளி இயேசுவை அறிந்திடுவாய் விண்ணவர் பாதம் பற்றிடுவாய் அன்பரின் ஒளியைப் பின் செல்லுவாய் அந்த காரத்தை வெறுத்திடுவாய்
2. உந்தன் பலம் உன்னை விட்ட கலா . தள்ளாடும் காலம் வரும் முன்னரே உன்னத பெலன் பெற்றிடுவாய் தப்பாமல் ஆவியில் அளித்திடுவாய் உண்மையாய் அவர்க்காய் வாழ்ந்திடுவாய் தந்தானே நித்தம் சேவித்திடுவோம்
3. திறந்த வாசல் உனக்கடைபடுமுன் திறப்பில் நிற்க வந்திடுவாய் குருவியின் கீதை ஒலி நிற்கும் குரு அவர் பாதம் புகழ்ந்திடுவேன் பயம் உந்தன் பாதம் தாக்கிடுமுன் பரிசுத்தர் அவரைப் பற்றிடுவாய்
4. பசியால் நீ வாடி கதறுமுன்னும் புசித்திடுவாய் என்றும் அவர் மன்னாவை பொற்கிண்ணி நசுங்கிப் போகுமுன்னமும் பருகிடுவாய் உயர் ஆசீர்வாதத்தை புலம்பல் தோனியைக் கேட்குமுன்னமும் பொன்னகர் பாக்கியம் எதிர் நோக்குவாய்