நிலையில்லா உலகினில்
nilaiyillaa ulaginil
1. நிலையில்லா உலகினில் அலைந்ததாம் நீசனென்னை நேசரே தேடியே கண்டெடுத்தீர் நினைந்தென்னை வரைந்தீரே உம் சிந்தையில் நீடுழியாய் உம்மை சேவிக்கவே
பரிசுத்தரே! நின் திரு கரத்தில் படைக்கிறேன் தத்தமாய் எனையுமக்கே மாறா நின் நோக்கமும் நிறைவேற்றியே மாற்றிடும் நின் சாயலாய்
2. "உம் சித்தம் செய்வதே ஆகாரம்" என்றீரே போதியும் நின் சித்தம் யான் செய்ய வே புதுப்பியும் மனதை உம் ஆவியால் ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் - பரி
3. "பூவில் உபத்திரமுண்டு திடன் கொள்ளுங்கள்" என்றார் இகமதில் வரும் இடர் துயர் யாவு மே இனிவரும் மகிமைக்கு இணையாகுமோ? பானபலியாயென்னை ஒப்புவித்தேன் - பரி
4. "நான் பரிசுத்தர், பரிசுத்தராயிருங்கள்" என்றார் பரிசுத்தமாக்கும் நின் வசனத்தினால் கறைதிரையற்ற பரிசுத்தனாக்க ஆவி ஆத்மா தேகம் ஒப்புவித்தேன் - பரி
5. "இதோ ! சீக்கிரம் நான் வருகிறேன்" என்றவர் என்று நான் காண்பேன் நின் திருமுகமே மறுரூபம் அடைந்தும்மோடேகிடவே மகிபனைத் எனையுமக்கொப்புவித்தேன்- பரி