நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
nilaiyillaa ulagathil alaindhenaiyaa
நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரே எனதேசையா
1. மறந்தும்மை மறுதலித்தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து மனதுருகினீரே ஐயா - என் மேல்
2. சிறந்த உன்முகம் காண விரைந்தாசித்தேன் சிலுவையின் தரிசனம் அளித்தீரையா இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன் இனிமேல் என் துணை நீரையா - பூவில்
3.உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர் உமதாவி என்னிலீந்து பெலனளித்தீர் உம்மையன்றி பூவில் வேறு அடைக்கலம் எமக்கில்லை உம்மை நம்பி ஜீவிப்பேனையா - இனி
4.அதிசீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம் அதிக நித்திய கனமகிமை தரும் பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்ததும் பதராமல் பொறுப்பேனையா - இன்னும்
5.உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர் இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர் விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல் விசுவாசம் பெருகுதையா - என்னில்
6. இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே இனிய இயேசையா உந்தன் திருமுகமோ எனக்கிந்த அனுபவம் அளித்திட திரும்பவும் தினம் ஜெபம் செய்கின்றேனையா ... தேவா
7. எனது மரணமோ உம் வருகை நாளோ எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா கனிவாய் வேண்டுகின்றேனையா - இப்போ
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal