நிலையில்லா இவ்வுலகில்
nilaiyillaa ivvulagil
நிலையில்லா இவ்வுலகில் பலவித கவலைகளால் அலைந்து தவித்த என்னை அன்போடு அணைத்தவரே
சோதனை வேளையில் தாங்கி என்னை சோர்ந்திடாமல் காக்கிறார் நாயகன் இயேசுவை வாழ்த்திடுவேன் நாள் தோறும் போற்றிடுவேன்
இயேசுவே உம் அன்பில் மறைத்திடுவேன் உலகத்தின் மாயை வெல்ல வாலிப வாழ்க்கையில் வீழ்ச்சி இல்லா வழிதனை போதியுமே
மேசியா வந்திடும் மகிழ் நாளினை மேல் நோக்கி வாஞ்சிக்கிறேன் நாயகன் இயேசுவே வாரும் என்பேன் நாள் தோறும் காத்திருப்பேன்