நிலையென்று வாழ்வை
nilaiyendru vaazhvai
நிலையென்று வாழ்வை நினைத்திடாமல் நிமிர்;ந்து நீ சிலுவையைப் பாரு இறைமகன் இயேசுவே எனைக் காரும் என்று இதயத்தால் அவரையே கேளு
நித்திய வாழ்வுக்குச் சத்தியம் தந்திடும் தேவனின் திருமுகம் பாரு (2) வார்;த்தையைத் தந்துன்னை மீட்டிடும் தெய்வம் என் இயேசுவைப் போல் வேறு யாரு (2)
அலைகின்ற மனதிற்கு ஆறுதல் தந்திட ஆண்டவர்; இயேசுவைத் தேடு (2) பாவக்கறைதனைக் கழுவிடும் பரமனின் மைந்தனின் நாமத்தைப் பாடு (2)
ஓடியே வந்தவர்; காலடியில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேளு (2) நாடியே வந்துன்னை வாரியே அணைத்தவர்; மந்தையில் சேர்;ப்பார்; நீ பாரு (2)