நிலையானவர் மறவாதவர் வார்த்தை
nilaiyaanavar maravaadhavar vaarthai
நிலையானவர் மறவாதவர் வார்த்தை என்றும் மாறாதவர் உலகங்களெல்லாம் வெறுக்கும் போது என்னை ஒருபோதும் வெறுக்காதவர்
உலக அன்பு பொய்தான் ஐயா உந்தன் அன்பொன்றே மெய் ஐயா முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா
கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர் தாயைப்போல தேற்றினீர் பணத்தால் என்னை மீட்கவில்லை உயிர்கொடுத்து என்னை மீட்டீர் ஐயா