நிலைவரமாய் ஒரு இதயமென்னில்
nilaivaramaay oru idhayamennil
நிலைவரமாய் ஒரு இதயமென்னில் சிருஷ்டித் தருளிடும் நாதா நேர்வழி விரும்புமென் இதயத்தவிப்பை தீர்த்தருளும் என் தேவா
1. உம் திரு சன்நிதி தன்னில் இருந்து தள்ளி விடாதிரும் என் தேவா பரிபூரணமாய் உரிமை எடுத்து கிரியை நடப்பியும் என் மனதில் (2)
2. இரட்சிப்பினால் பெற்ற பரமானந்தம் மீண்டும் நல்கிடும் என் மனதில் தன்வசம் செல்லா ஒருமனமென்னில் விண்ணகம் நோக்கிட செய்திடுமே (2)
3. துணிகர பாவங்கள் அணுகி விடாமல் துாயவர் செட்டையில் சரணடந்தேன் மறைமுக குறைகள் ஆட்கொள்ளாமல் திருமுகம் நோக்கிட தயை புரியும் (2)