நிதமும் பாடிப் போற்றுவோம்
nidhamum paadip potruvom
நிதமும் பாடிப் போற்றுவோம் இதயம் பொங்கிப் பூரிப்பாய் - நம் தேவனை
1.விண்ணவர் நம்மோடிருந்தாரே - இரு கண்ணின் மணிபோல காத்தாரே எண்ணிலா நன்மைகள் பல ஈந்தாரே பண்போடு பணிந்திடுவோம்
2.வந்தார் பூவில் நமைமீட்க - தம்மை தந்தார் பலியாய் குருசினில் ஈந்தர் சுத்த ஆவிதனை சிந்தித்துப் பணிந்திடுவோம்
3.அந்தகாரத்தில் ஆழ்ந்திருந்தோம் - தம் விந்தையான ஒளி காட்டினார் சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தாரே சந்ததம் பணிந்திடுவோம்
4.வாழ்வினிலே பல வீழ்ச்சியுற்றோம் - நாம் ஆழ்ந்திடாமல் கைதூக்கினார் சூழ்ந்திடும் சோதனை யாவும் ஜெயித்திட தாழ்ந்துமே பணிந்திடுவோம்
5.சத்துரு செய்த சதிமோசம் - அவை அத்தனையும் தூரப் போக்கினார் சுத்தர்களாய் நாம் சோபித்திலங்கிட நித்தமும் பணிந்திடுவோம்
6.தொனித்திடுதே சத்தம் தேசமெங்கும் - இயேசு வனிதையைச் சேர்க்க வாறாரே புனிதராகவே பூவினில் நிற்க கனிவுடன் பணிந்திடுவோம்