நிதம் ஸ்தோத்திரம் செய்குவேன்
nidham sthothiram seyguven
நிதம் ஸ்தோத்திரம் செய்குவேன் தேவகுமாரா ஞானா! என் மணவாளா!
1. இந்நாள் வரையும் காத்த கரமே ஜீவா நிதமும் போற்றுவேன்; இன்றும் துதி ஏற்றுவேன்.
2. துன்பம் அணுகா தூக்கி எடுத்து தூயா! எமையும் சேர்த்தீரே தூய்மை ஆக்கி வைத்தீரே
3. மண்ணின் மயில் மாண்டு போக தென்னை மணிபோல் காத்தீரே அன்னை போல அணைத்தீரே
4. பொல்லாங்கன் போர் செய் தெதிர்த்தபோதும் தேவன் எனக்காய் ஜெயித்தாரே வேண்டுதல்கள் செய்தீரே,
5. கொந்தளிப்பால் படவில் அலைகள் குமுறி எழுந்து ஆழ்த்தையில் கடலை அதட்டி மீட்டவா!
6. பாவத்தின் சாபம் யாவும் நீக்கி ரோகம் எல்லாம் ஏற்றவா! என்றென்றும் நான் போற்றுவேன்