நிச்சயமாகவே முடிவு உண்டு
nicchayamaagavae mudivu undu
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் (2)
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது (2)
1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2) காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் (2) உந்தன் ஜீவிய காலமெல்லாம்
2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே (2) உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் (2) அவைகள் ஆச்சர்யமாய் இருக்கும்