நிச்சயம் ஏசு என் சொந்தமே
nicchayam esu en sondhamae
1. நிச்சயம் ஏசு என் சொந்தமே இது தெய்விக மகிமையே ரட்சண்ய உரிமை யுறவே வந்தேன் சுத்திகாரம் பெறவே.
இதே என் சாட்சி என் கீதமே மீட்பரைப் போற்றல் எக்காலமே இதே என் சாட்சி என் கீதமே மீட்பரைப் போற்றல் எக்காலமே.
2. பூரண பாக்கியம் தாழ்மையும் எனக்குண்டு உயர் காட்சியும் விண் தூதர் வானின்றிறங்கினார் அன்பின் எதிரொலி தொனித்தார்.
3. மா தாழ்மை அமைதி எங்குமே மீட்பரில் ஆனந்தம் பெறுவேன் காத்திருக்கிறேன் மேல் நோக்கியே அவர் அன்பு தயை நிறைந்தே.