நேற்றும் இன்றும் என்றும்
netrum indrum endrum
நேற்றும் இன்றும் என்றும் துதி ஸ்தோத்திரங்கள் சொல்லி என் அப்பாவை துதித்திடுவேன் அவரை தப்பாமல் புகழ்ந்திடுவேன் (2)
அப்பா வாழ்க இராஜா வாழ்க இயேசு வாழ்க என் நேசர் வாழ்க (2)
ஒவ்வொரு பொழுதும் ஒடோடி வந்து உம்மைப் புகழ்ந்திடுவேன் உம்மைப் புகழ்ந்திடுவேன் ஓங்காரக் கடலின் ஓயாத அலையாய் உம்மைத் துதிப்பேன் நான் உம்மைத் துதிப்பேன் (2) வேறோன்றும் வேண்டாம் உலகத்திலே வேதனை வேண்டாம் நரகத்திலே (2)
உமது எழுப்புதல் இந்தியாவில் மலர்ந்திட உழைத்திடுவேன் நான் உழைத்திடுவேன் நதியோரம் வளரும் இலையுதிரா மரமாய் நான் இருப்பேன் அப்பா நான் இருப்பேன் (2) வேறோன்றும் வேண்டாம் உலகத்திலே நீர் மட்டும் போதும் என் வாழ்வினிலே (2)