நேற்றும் இன்றும் என்றும்
netrum indrum endrum
1. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா இயேசுவே நேத்திரம் போல் உந்தன் தயவால் காத்தீரே “உலகின் முடிவு வரை இருப்பேன் உங்களோ" டென்றுரைத்த வல்ல தேவனே
- உம்மை துதித்திடுவேன்
இயேசுவே நீர் எந்தன் ஜீவ ஊற்றல்லவோ நித்தமும் நடத்தி தாகம் தீர்க்கும் கன்மலையே உம் முகம் கண்டு நான் உம் சாயல் அடைந்தே உம்மையே என்றென்றும் சேவிப்பேன்
2. விசுவாச பாதையாம் பாலையாமதிலே வந்ததாம் சோதனை வேதனை யாவுமே தண்ணீர்த்தடாகமாய் மாற்றினீரன்றோ தாங்கியே கரங்கொடுத்தணைத்தீரன்றோ - கானக வழியில் - இயேசுவே
3. நல்ல சமாரியன் உற்ற சிநேகிதன் நம் பெலவீனத்தில் பரிதவிப்பு வரை ஊற்றிடும் எண்ணெயும் திராட்சரசமும் மாற்றிட அடிக்காயம் இரணமதயும் - கீலேயாத் தைலமாய் - இயேசுவே
4. நித்திய வாசியும் உன்னதர் நீரே சுத்தரும் மகத்துவமும் உள்ளவர் நீரே பணிந்த ஆவியை உயிர்ப்பிக்கவும் உடைந்த உள்ளமதைத் தேற்றிடவும் - ஆவியால் அபிஷேகித்தார் - இயேசுவே
5. சீயோன் மணவாளன்! சாலேமின் ராஜனே! சீர் பலனைச் சேர்க்க சீக்கிரம் வருவார் நற்பலன் நான் உம்மை சேர்ந்திட அர்ப்பணித்தேன் என்னை உந்தன் சேவையில் - நான் உந்தன் சொந்தம் என்றுமே - இயேசுவே