நேற்றும் இன்றும் என்றும்
netrum indrum endrum
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் ஆராதனைக்குரியவரே ஆதியும் நீர் அந்தமும் நீர் - ஜோதியும் நீர் என் சொந்தமும் நீர்
இந்த தேவன் என்றுமுள்ள சதா காலங்களிலும் நம் தேவனே - 2 மரண பரியந்தம் நடத்துவாரே கை விடாமல் காப்பவரே
ஜீவனை தந்தீரே எனக்கு தயவையும் - பாராட்டினீர் என்னை விட்டு விலகுவதில்லை என்ற வாக்கு மாறிடுமோ
பற்பல பாஷைகள் என் நாவினிலே வைத்தவரே பாடுவேன் மகிழ்வேன் - கொண்டாடுவேன் பரவசமாகிடுவேன்
ஆவியின் அனாலாலே என்னை ஆட்கொள்ளும் பிரகாசிப்பேன் உலகத்தின் முடிவு பரியந்தமும் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்