நேற்றும் இன்றென்றுமே
netrum indrendrumae
நேற்றும் இன்றென்றுமே - மாறிடார் இயேசுவே நம்பியே வாருமே - அன்பரினண்டையே
1. வானமும் பூமியும் - நிலை மாறினாலும் வல்லவர் வாக்கொன்றும் - ஒருக்காலும் மாறாது - நேற்று
2, உந்தனுக்காகவே - உயிர்தனை ஈந்தவர் உன்னதர் இயேசு தாம் - என் நோயை ஏற்றவர் - நேற்று
3. பாவமும் சாபமும் - ரோகமும் தீர்த்திடும் பாய்ந்தோடும் கல்வாரி - ஊற்றண்டை வாருமே - நேற்று
4. வார்த்தை யுரைத்திட - பார் உருவாகிற்று வார்த்தையினாலே - உன் வாதைகள் நீங்கும் - நேற்று
5. அற்புத தேவனே - அழைக்கிறார் உம்மையே தவறாது நிறைவான - சந்தோஷம் ஈகுவாடர் - நேற்று