நேசிக்கிறேன் என் ஆத்ம நேசரே
nesikkiren en aathma nesarae
நேசிக்கிறேன் என் ஆத்ம நேசரே முழு உள்ளத்தோடும் முழு ஆத்மாவோடும் உம்மை நேசிக்கிறேன்
1. காணாமல் சென்று அலைந்து திரிந்தேன் காண்பவர் நீர் என்னை கண்டுகொண்டீர் (காணாமல் சென்று உம்மை மறந்தேன் காப்பவர் நீர் என்னை நினைவு கூர்ந்தீர்) – நேசிக்கிறேன்..
2. தாயைப் போல என்னை தேற்றுகின்றீர் தகப்பனைப் போல் என்னை சுமக்கின்றீர் – நேசிக்கிறேன்.
3. நம்பிக்கையில்லா தவிக்கின்றவேளை நங்கூரமாய் நீர் எனக்குள் வந்தீர் – நேசிக்கிறேன்..
4. ஊழியப் பாதையில் ஒடுக்கப்பட்டாலும் ஊன்றுக்கோலாய் என்னை மாற்றினீரே – ஆராதிப்பேன்.
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் ஆருயிரே