நேசத்தில் இனியவரே
nesathil iniyavarae
நேசத்தில் இனியவரே வெள்ளைப்போளச் செண்டே என்கேதியில் பூக்கும் மருதோன்றிப் பூங்கொத்தே
பல்லவி
உங்க நிழலில் அமர்கிறேன் உங்க சமூகத்தில் மகிழ்கிறேன் காட்டு மரங்களில் கிச்சிலி நீரே.
1.இடது கையால் என்னைத் தாங்கி வலக்கரத்தால் என்னைத் தழுவி ஆற்றித் தேற்றுகிறீர் உங்க நேசத்தில் மயங்கினேன்
பல்லவி
உங்க நிழலில் அமர்கிறேன் உங்க சமூகத்தில் மகிழ்கிறேன் காட்டு மரங்களில் கிச்சிலி நீரே.
2.மலர்ந்த முகத்தை எனக்கு காட்டி கதவின் வழியே கையை நீட்டி என்னை இழுத்துக் கொண்டீர் உம்மில் உறவாடி மகிழ்கிறேன்
3.ஒளி மிகுந்த வெண்மையானீர் தனித்து தோன்றும் சிவப்புமானீர் மிகச் சிறந்தவரே - உம்மைத் துதித்து மகிழ்கிறேன்
4வெண்புறா போல் ததும்பும் கண்களும் வெள்ளைப்போளம் வடியும் உதடும் என்னைக் கவர்கிறதே உங்க அழகில் மயங்கினேன்