நேசருக்கேற்ற பாடலை நான்
nesarukketra paadalai naan
நேசருக்கேற்ற பாடலை நான் பாடுவேன் இயேசுவுக்காக வாழ்நாளெல்லாம் வாழுவேன்
தேற்றுவார் என்னை ஆற்றுவார் ஏந்துவார் என்னை சுமப்பார்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா வெள்ளைப் போலச் செண்டு எந்தன் நேசர் இயேசு அவரே
என்னை ஆளும் கர்த்தர் அவரே என்னில் வாழும் இயேசு அவரே எந்தன் நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் வாழ்வின் மேன்மை அவரே
எந்தன் கன்மலையும் அவரே எனைக் காக்கும் தேவன் அவரே ஜீவ ஊற்றும் அவரே அபிஷேகத் தைலம் அவரே