நேசரே வர இன்னும்
nesarae vara innum
நேசரே வர இன்னும் தாமதமேன் தேடிடும் என் மனம் வாடிடுதே
1. காத்திருந்தேன் மனம் கலங்குவதாலே கர்த்தனே காலமும் கடந்திடலாச்சே - நேசரே
2. யுத்தங்கள் பாவங்கள் பெருகுவதால் புத்தர்கள் கூட்டமும் தேடுவாச்சே - நேசரே
3. தாரகை போல் சோபை வீசிய தாசரும் தாரணியா மீது தயங்கி வீழ்ந்தான் - நேசரே
4. லீபனோன் போன்ற உம் ரூபத்தை காண ராஜனே நீர் தேடும் மான் போலானேன் - நேசரே
5. உன் மணவாளனெங்கே யென்றுலகம் என்னை நிந்திப்பதை நீர் அறியீரோ - நேசரே
6. இலவச பரிசுத்தம் எமக்களித்தோனே சீயோனின் மாதென்னைத் தேடிடுவீரோ - நேசரே