நேசமுள்ள யேசுவே உம் பாதம் அண்டினேன்
nesamulla yesuvae um paadham andinen
1. நேசமுள்ள யேசுவே உம் பாதம் அண்டினேன் தாசன் என்னைத் தயவாக ஏற்றுக்கொள்ளுமே. ஆசிர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன் யேசுவே! உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்.
2. என் அகோர பாவமெல்லாம் நீர் சுமந்தீரே வன் கொலையின் வாதை யாவும் நீர் சகித்தீரே. ஆசிர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன் யேசுவே! உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்.
3. அந்தரங்க பாவத்தால் மா வேதனை யுற்றேன் உந்தன் திருரத்தத்தாலே ஆனந்தம் பெற்றேன். ஆசிர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன் யேசுவே! உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்.
4. என் குறைகள் யாவையும் நீர் நன்றாய் அறிவீர் இன்பரே! தேவாவியாலே ஸ்நானம் அருள்வீர். ஆசிர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன் யேசுவே! உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்.
5. ஆத்துமாக்கள் உம்மை நம்பி ஜீவன் பெறவே பக்தர் என்னை ஸ்வாமி நீரே வேலை கொள்வீரே. ஆசிர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன் யேசுவே! உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்.