நேச யேசுவுக்கே யாவும் செய்வேன்
nesa yesuvukke yaavum seyven
1. நேச யேசுவுக்கே யாவும் செய்வேன் என்ன நேரிட்டாலும் பின் வாங்க மாட்டேன் நற்போர் வீரனைப் போல் நிலைத்து நின்று நேசர் கற்பனைகள் செய்வேன் நான் என்றும்.
2. யாவையும் வெறுத்தேன் என் யேசுவுக்காய் ஆவலாய்ச் சிலுவை எங்குமவர்க்காய் சுமந்து பின் செல்ல எந்தன் ஜீவ நாள் தந்தேன் இதோ ராஜா! எப்போதும் நீ ஆள்.
3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன் என்ன நேரிட்டாலும் மெய்யாய்ச் சகிப்பேன் பாவ அடிமைகள் ரட்சிப்படைய தளரா வைராக்கியம் என்னில் படையும்.