நேச தோழரே வாருமே
nesa thozharae vaarumae
1. நேச தோழரே! வாருமே! நித்ய வாழ்வுறப் பாருமே! மதுவிலக்குச் சங்கத்திலே வாஞ்சையாய் இப்போதே சேருமே!
சேருமேன்! சேருமே! மது விலக்கு சங்கத்திலே சேருமேன்! சேருமே! வாஞ்சையாய் இப்போதே சேருமே!
2. வீணில் அலைந்து போவதா? விஸ்கி பிராந்தியினால் சாவதோ? ஆணவம் என்பார்கள் அல்லவோ ஆகையால் இப்போதே சேருமே!
3. சுகவீனமும் துன்பமும் சோதனை போராட்டம் பயமும் இல்லாமல் வாழ விரும்பினால் இப்போதே தப்பாதே சேருமே!