நேர்த்தியாய் செய்திடுவார்
nerthiyaay seydhiduvaar
நேர்த்தியாய் செய்திடுவார் - தேவன் நேர்த்தியாய் செய்திடுவார் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்திடுவார்
1. சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு நேர்த்தியான பங்கும் உண்டு என்றவர் மாறிடார் சுதந்திரம் தந்திடுவார்
2. பலத்த கரத்தில் அடங்கியிரு ஏற்ற காலத்தில் உயர்த்திடுவேன் என்றவர் மாறிடார் மேன்மையாய் உயர்த்திடுவார்
3. வனாந்திரத்தில் வழிகளும் உண்டு அவாந்திரத்தில் நதிகள் உண்டு என்றவர் மாறிடார் வழிகளைத் திறந்திடுவார்
4. சீக்கிரம் வந்திடுவேன் - உன்னை என்னிடம் சேர்த்துக் கொள்வேன் என்றவர் மாறிடார் சீக்கிரம் வந்துடுவார்