நெஞ்சமே நீ அஞ்சிடாதே
nenjamae nee anjidaadhae
நெஞ்சமேநீ அஞ்சிடாதே நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே நீ இயேசுவன்டை துன்பங்களில் அஞ்சிடாதே_2
1.இதயத்தின் பாரங்களை நான் யாரிடம் சொல்வேனையா_2 உம்மை விட்டால் இந்த உலகில்_2 யாருமில்லை என் இயேசையா_2 நெஞ்சமே...
2.கண்ணீரை கன்டணவர் உன்னை கலங்காமல் காத்திடுவார்_2 கலங்காதே திகையாதே_2 இயேசு நானே உன் பரிகாரி ஏழைகளின் உபகாரி_2 நெஞ்சமே...
3.இரக்கத்தின் இறைவனவர் மனதுருக்கத்தின் மன்னனவர்_2 ஏழையின் இதயமவர்_2 வேதனையை அறிந்திடுவார் உன் கண்ணீரை துடைத்திடுவார்_2
நெஞ்சமே நீ அஞ்சிடாதே நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே நீ இயேசுவன்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே