நெஞ்சம் கலங்கிடுதே
nenjam kalangidudhae
நெஞ்சம் கலங்கிடுதே என நெஞ்சம் கலங்கிடுதே உம் கல்வாரி காட்சியை கண்டு - 2
உம் தியாகத்தை நினைக்கையிலே என் உள்ளம் தாங்கலையே - 2
என் பாவத்திற்கு பரிகாரி நீரே என் துரோகத்திற்கு பலியும் நீரே - 2 உம் மரணத்தால் எனை மீட்டீரே உம் அன்பு பெரியதே - 2
உம் சிரசில் எனக்காய் முள் முடியோ உயர் திரு இரத்தம் எனக்காகவோ - 2 ஈட்டியும் உம் நெஞ்சை பிளந்ததோ உம் கிருபை பெரியதே - 2
நீர் நொறுக்கப்பட்டு அடிக்கப்பட்டு ஒரு கள்ளன் போல் தொங்கினீரே - 2 பிதாவின் சித்தம் முடிந்ததோ உம் தாழ்மை பெரியதே - 2