நீரின்றி ஓர் கதி இல்லை
neerindri or kadhi illai
நீரின்றி ஓர் கதி இல்லை யார் எந்தன் குரல் ஏற்றிடுவார் உம் கிருபை என்னில் தந்திடுமே இயேசுவே பிராணநாதா இயேசுவே பிராண நாதா
ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை உம் முகம் மறையாதிரும் -2 ஏழையின் குரல் கேட்டிடும் உம் சமூகம் வந்த அடியேன் என்னை உம் திரு கண் கொண்டு நோக்கிடும் உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
கட்டுண்ட மனிதனின் சத்தத்தைக் கேட்டு விடுதலையை ஈந்திடும் -2 பாதையை நீர் காட்டிடும் வானத்திலிருந்து பூமியின் மேல மானிடர் எம்மை நோக்கிடும் மானிடர் எம்மை நோக்கிடும்
என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும் புல்லினை போல் உலர்வனே -2 இரக்கம் என்னில் காட்டிடும் காருண்ய கரங்கள் கொண்டென்னை தாங்கி உம் கிருயையில் நடந்திடும் -2