நீரே நிரந்தர உறவே
neerae nirandhara uravae
நீரே நிரந்தர உறவே இயேசுவே இயேசுவே மாறா மகிமையும் உமக்கே இயேசுவே....
உமதன்பை நானும் நினைத்திருப்பேன் உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன் உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன் மறவேன்.... உம்மையே...- நீரே நிரந்தர
1.நோயில் படுத்த போதும் தேடி அணைத்தீர் தேவன் நீரே உம்மை மறந்த போதும் என்னை நீரோ மறந்ததில்லை இதுவரை நானும் அறிந்திட்டத்தில் உமதன்பு தானே அதிசயமே நேசமான தேவன் நீரே தானே ஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர
2.வாதை தொடர்ந்த போதும் தேவை அறிந்து தேற்றினீரே கண்ணீர் வடிந்த நேரம் அன்னையாகி அணைத்து கொண்டீர் எதுவந்த போதும் பயமில்லையே உமதன்பு தானே பரவசமே பாரம் நீங்க தோளில் தாங்குவீரே பாசப் பார்வையாலே தேற்றுவீரே-நீரே நிரந்தர