நீரே நீரே எனதெல்லாம் நீரே
neerae neerae enadhellaam neerae
நீரே நீரே எனதெல்லாம் நீரே என் வாழ்வும் வழியும் வளமும் நீரே - 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் நீரே - 2 தாயை போல என்னை காப்பவர் நீரே தந்தையை போல என்னை அணைப்பவர் நீரே- 2
பாவி எனக்காய் பாவமாகி என் பாவம் சுமந்தவர் நீரே - 2 சிலுவையின் நிழலில் தஞ்சம் அடைந்தேன் உம் தழும்புகளால் சுகம் பெற்றுக் கொண்டேன் -2
மகிமை நாளில் என்னை மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பவர் நீரே -2 உந்தன் சமூகத்தில் அங்கே ஆடிபாடுவேன் முடிவில்லாத மகிமையிலே களிகூருவேன் - 2