நீரே எனக்கு சொந்தம்
neerae enakku sondham
நீரே எனக்கு சொந்தம் நீரே என் தெய்வம் - 2 உம்மைப் பாடுகிறேன் உளமாற துதிக்கிறேன் - 2
இராஜா நீர் வாழ்க தெய்வமே நீர் வாழ்க - 2
1) உம் கரத்தில் நான் கருவி ஆனேன் எடுத்து என்னை பயன்படுத்தும் - 2 உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2
2) உம் கரத்தில் நான் களிமண் ஆனேன் உம் சித்தம் போல் வனைந்திடுமே - 2 உமக்காக உழைக்கும் பாத்திரமானேன் பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2
3) உமக்காக உழைக்கும் அடிமையானேன் வல்லமையால் என்னை நிரப்பிடுமே - 2 யோனாவைப் போல பவுலைப் போல பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2