நீரே என் மேய்ப்பரானீரே
neerae en meypparaaneerae
நீரே என் மேய்ப்பரானீரே நீர் மட்டும் போதுமே நீரே என் நண்பரானீரே வேறென்ன வேண்டுமே ?-2
உம் பாதம் பற்றி நான் பிடிப்பேன் நீர் இருக்க பயம் எனக்கு ஏது ?-2-நீரே என்
1.உலக இன்பங்கள் என்னை தொடர்ந்தாலும் மாய உலகினை வெறுத்திடுவேன் துன்ப துயரங்கள் என்னை தொடர்ந்தாலும் உமது காலடியில் நான் கிடப்பேன்
பல்லவி
ஒரே ஒரு நொடி உம்மை பிரியேனே உம் அன்பை எண்ணிடுவேன் இனி எதற்குமே நான் அஞ்சிடேனே நீர் என்னில் இருக்கையிலே-நீரே என்
2.தந்தை தாயென்னை மறந்து போனாலும் என்னை நினைத்திட நீர் உண்டு உலகமே என்னை எதிர்த்து நின்றாலும் எனக்கு துணையாளர் நீர் உண்டு
பல்லவி
ஒரே ஒரு நொடி உம்மை பிரியேனே உம் அன்பை எண்ணிடுவேன் இனி எதற்குமே நான் அஞ்சிடேனே நீர் என்னில் இருக்கையிலே-நீரே என்