நீரே அல்லாமல் என் வாழ்வில்
neerae allaamal en vaazhvil
நீரே அல்லாமல் என் வாழ்வில் யாருண்டு உம்மை அல்லாமல் என் துணை யாருண்டு உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் - 2
நேசிப்பார் யாரும் இல்லை அன்பாய் உதவிடுவார் ஒருவரும் இல்லை - 2 கண்ணீர் சிந்தி கதறிடும் வேலை ஆறுதல் அளிப்பார் இல்லை - 2
சோகங்கள் சூழும் நேரம் கடும் பாரங்கள் நெருக்கும் போதும் - 2 பாரினில் என்னை தேற்றிட தேவா உம்மைப் போல் யாரும் இல்லை - 2 - இந்த
நிந்தைகள் நெருக்கங்களே வியாகுலங்கள் வருத்தங்களும் - 2 கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து பிரித்திட முடியாதையா - 2