நீர் உண்மையுள்ளவர்
neer unmaiyullavar
1. நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா! மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர் நீர் ஐஸ்வர்யமுள்ளவர் சதா காலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்! உம் உண்மை பெரியது! காலைதோறும் புது கிருபைகள் தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன் உம் உண்மை பெரியது என்னிடமாய்
2. உம் உண்மை இரக்கம் அன்பு கிருபை எத்தனை மா திரள் என்பதற்கு கோடை பனி காலமும் அறுப்பு யாவும் சர்வ சிருஷ்டியும் சாட்சியாகும்
3. தேவசமாதானம் பாவ மன்னிப்பும் பெலத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர் உம் திவ்ய சமுகம் என்னை நடத்தி ஆசீர்வதியும் என் அன்பின் தேவா