நீர் திவ்விய வழி
neer thivviya vazhi
நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம்.
நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம்.
நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர்.
நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும்.