நீர் திறந்ததை அடைக்க முடியுமோ
neer thirandhadhai adaikka mudiyumo
நீர் திறந்ததை அடைக்க முடியுமோ நீர் அடைத்ததை திறக்க முடியுமோ நீர் சொன்னதை மாற்ற முடியுமோ நீர் செய்வதை தடுக்க முடியுமோ (2)
எதை செய்தாலும் ஆராதிப்பேன் என்ன நடந்தாலும் ஆராதிப்பேன் நன்மையானாலும், தீமையானாலும் உம்மையே ஆராதிப்பேன் (2)
ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை (2)
1. கடல் அலை எதிர்த்து நிற்குமோ? பெருங்காற்று எதிர்த்து வீசுமோ இரையாதே என்ற வார்த்தை வெறுமையாய் திரும்பி வந்திடுமோ (2)
வார்த்தையில் அதிகாரம், வார்த்தையில் அபிஷேகம் வார்த்தையில் அற்புதம், வார்த்தையில் உண்டு காம்
2. சிங்கத்தின் வாய்கள் திற்குமோ அக்கினியின் சூளை எரிக்குமோ? தப்புவிக்கும் தேவன் இருக்க சேதங்கள் எனக்கு வந்திடுமோ? (2)
ஜெபத்தில் அதிகாரம்,ஜெபத்தில் அபிஷேகம் ஜெபத்தில் அற்புதம், ஜெபத்தில் உண்டு சுகம்
3. சிறை கதவு பூட்ட முடியுமோ பேதுரு பவுலை காக்க முடியுமோ துதிக்கும் சேனை முன்னால் சாத்தானின் எண்ணம் பலிக்குமோ? (2) துதியில் அதிகாரம், துதியில் அபிஷேகம் துதியில் அற்புதம், துதியில் உண்டு சுகம்