நீர் தந்தீர்
neer thandheer
1. நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப்பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய்; நான் யாது தந்திட்டேன்.
2. பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும்; நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன்?
3. பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர்; பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய்; நான் யாதெது விட்டேன்?
4. சொல்லொண்ணா வேதனை அகோர கஸ்தியும் சகித்தீர் எனக்காய் நரகம் தப்பவும் சகித்தீர் எனக்காய்; நான் யாது சகித்தேன்?
5. கொணர்ந்தீர் எனக்காய் விண் வீட்டினின்று, மீட்பு சமூலமாய் மன்னிப்பு மா அன்பு கொணர்ந்தீர் எனக்காய்; நான் யாது கொணர்ந்தேன்.
6. என் ஜீவன் தருவேன் பற்றாசை ஒழித்து; உமக்காய் ஜீவிப்பேன் யாவுமே சகித்து நீர் தந்தீர் உம்மையே நான் தந்தேன் என்னையே.