நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ
neer solliyum seyyaadhiruppeero
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம் ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே
பொய் சொல்ல நீர் மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரன் அல்லவே - 2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே என் தேவைகளை முன் நின்று பார்த்து கொள்பவர் நீரே - 2
நீர் எனக்கு கொடுத்த வாக்குதத்தம் எல்லாம் காலம் கடந்தாலும் நீர் நிறைவேற்றுவீர் நீர் என்னுடன் செய்த உடன்படிக்கைகளை நீர் ஒருபோதும் முறிப்பதில்லையே
நீர் எனக்காக திறக்கும் பாதைகளை அதை ஒருவராலும் அடைக்க முடியாதே நான் உமக்காக இழந்தவைகளெல்லாம் இரட்டத்தனையாக எனக்கு தருவீரே