நீர் செய்த நன்மைகளை
neer seydha nanmaigalai
நீர் செய்த நன்மைகளை நினைத்து ஒவ்வொரு நாளும் உம்மை துதிப்பேன் -2 ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா -2
1. தள்ளப்பட்ட என் காயங்கள் யாவையும் ஆற்றி சுகம் தந்த தேவாதி தேவன் ஆரோக்கியம் தந்து ஆதரவும் தந்து இரக்கம் செய்த என் இயேசு ராஜன் -2 உம்மையே பாடுவேன் உயிருள்ள நாளெல்லாம் உயர்த்தி போற்றுவேன் ஜீவிய காலமெல்லாம் -2
2. ஒவ்வொரு நாளும் துணையாக வந்தீர் துன்பங்கள் நீக்கி சந்தோஷம் தந்தீர் சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்து கன்மலை மேலே உயர்த்திய மகிமை -2 உம்மையே பாடுவேன் உயிருள்ள நாளெல்லாம் உயர்த்தி போற்றுவேன் ஜீவிய காலமெல்லாம் -2
3. நிந்தைகள் அவமானம் சூழ்ந்திட்ட போது என்னை விட்டு என்றும் விலகாத நேசர் தோல்விகள் மாற்றி வெற்றிகளை தந்து என்னை மீட்டுக் கொண்ட என் இயேசு ராஜன் -2 உம்மையே பாடுவேன் உயிருள்ள நாளெல்லாம் உயர்த்தி போற்றுவேன் ஜீவிய காலமெல்லாம் -2