நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
neer seydha nanmaigal aayiram
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா நீர் செய்த அதிசயம் ஆயிரம் ஆயிரம் உண்டு எண்ணிலடங்காதையா
என் இயேசுவே என் ஆசையே உம்மையே ஆராதிப்பேன்
1. கருவினில் கண்டீர் கருணையாய் வளர்த்தீர் உந்தன் கிருபைதனை என் மேல் பொழியச் செய்தீர் என் நேசமே என் பாசமே உம்மைத் தானே உயர்த்திடுவேன்
2. ஜீவ அப்பம் நீரே ஜீவ தண்ணீரே இரட்சிப்பின் வஸ்திரத்தால் என்னை மூடி காத்தவரே என் பெலனே என் கோட்டையே உம்மைத்தானே உயர்த்திடுவேன்
3. உந்தன் வருகைதனில் என்னையும் நினைத்திடுவீர் உந்தன் மகிமைக்குள்ளாய் என்னை அழைத்துச் சென்றிடுவீர் என் துணையாளனே என் மணவாளனே உம்மைத்தானே உயர்த்திடுவேன்