நீர் ஒருவரே ஆளுகை செய்பவர்
neer oruvarae aalugai seybavar
நீர் ஒருவரே ஆளுகை செய்பவர் நீர் ஒருவரே துதிக்குப் பாத்திரர் நீர் ஒருவரே எனக்காய் மரித்தவர் மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்தவர்
உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் இரத்தத்தால் நான் மீண்டும் பிறந்தேன்
1. இழந்த என்னை தேடியே வந்தீர் விலையில்லா இரட்சிப்பை எனக்கு தந்தீர்-2
2. காயங்கள் ஆற்றினீர் கண்ணீரை மாற்றினீர் மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீர்-2
3. பாவங்கள் மன்னித்தீர் சாபங்கள் நீக்கினீர் உலர்ந்துபோன வாழ்க்கையை உயிர்பெறச் செய்தீர்