நீர் மாத்ரம் போதும் நீர்
neer maathram podhum neer
நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் இயேசுவே எனக்கு என் பெலவீன நேரத்திலே எனக்கு பெலனாக வந்தவரே என் சுகவீன நேரத்திலே எனக்கு சுகத்தை தந்தவரே
என் கண்ணீரின் வாழ்க்கையிலே எனக்கு ஆறுதலானவரே நான் கலங்கிடும் வேளையிலே எனைத் தேற்றிட்ட சிநேகிதரே
நான் தனிமையில் நின்றபோது எனக்கு துணையாக வந்தவரே ஒரு தகப்பனைப் போல என்னை இம்மட்டும் சுமந்தவரே
நான் பாவியாய் இருந்தபோது எனைத் தேடியே வந்தவரே என் மேல் பாசம் வைத்ததனால் உம் ஜீவனை தந்தவரே